என்னைப் பற்றி

murugasiavakumar

தருமபுரி மாவட்டம், அரூர் வட்டத்தில் உள்ள சிக்கனூர் என்ற சிற்றூர் தான் சொந்த ஊர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் தமிழிலக்கியத்தில் பி.ஏ., பட்டமும், சென்னை புதுக் கல்லூரியில் எம்.ஏ., பட்டமும் பெற்றேன். சென்னை பல்கலைக்கழகத் துக்காக ‘தமிழ்ச் சமூகத்தில் மாற்று அரங்கு’ என்னும் பொருளில் சமூக மாற்றத்துக்கான நாடகங்கள் பற்றி ஆய்வு செய்து எம்.பில் பட்டம் பெற்றுள்ளேன். இப்போது சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் பி.எச்டி பட்டத்துக்காக ஆய்வு படிப்பை மேற்கொண்டுள்ளேன்.
தேடி அலைந்தேன்
இளங்கலை படிப்பை முடித்தபோது பேராசிரியர் வே.நெடுஞ்செழியனின் தூண்டுதலில் கலை, இலக்கியத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அத்துறைகளில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற வேட்கையுடன் சென்னைக்கு வந்தேன். அலைந்து திரிந்து வேட்கையை சாத்தியப்படுத்த முயன்றேன். கவிதை, கட்டுரை, சிறுகதை எழுதுதல், நாடகம் நடித்தல் போன்ற செயல்பாடுகளாலும், நண்பர்களின் அறிமுகத்தாலும் பத்திரிக்கையாளர் பணி கிடைத்தது. இப்போது என் வாழ்வை நகர்த்தி கொண்டிருப்பது அதுவே.
அடையாளம்
முதுகலை பட்டப்படிப்பு படிக்கும்போது அரசு விடுதியின் தங்கினேன். அங்கு நானும் சக தோழர்களும் பட்ட துன்பங்களை வெளியுலகுக்கு கொண்டு வர மனம் எண்ணியது. சென்னைக் கல்லூரிகளில் தங்கிப் படித்துவரும் அரசு விடுதிகளின் அவல நிலையை நண்பர்களின் உதவியுடன் ஆவணப்படமாக இயக்கியுள்ளார். ‘விடுதீ’- ஆவணப் படம் மாநில அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

புத்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, சாக்கியமுனி புத்தர் என்ற பெயரில் நூல் எழுதினேன். விகடன் பிரசுரத்தில் வெளிவந்து விற்பனையில் உள்ளது.

பின்னூட்டமொன்றை இடுக

Trackback this post  |  Subscribe to the comments via RSS Feed